வியாழன், நவம்பர் 03, 2011

ஷஹ்லா மஸூத் கொலை:அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு-சி.பி.ஐ

shehla_cbi0509
புதுடெல்லி/போபால்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலையில் டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக சி.பி.ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. சி.பி.ஐயின் லக்னோ பிரிவு நடத்திய விசாரணையில் இதுக்குறித்த தெளிவான தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி தகவல் அறியும் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்பு வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததன் காரணமாக வழக்கில் போதிய முன்னேற்றம் ஏற்படாமலிருந்தது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.
டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு ஷஹ்லாவின் கொலையில் பங்கிருப்பதாக சி.பி.ஐ கூறினாலும் அவர்கள் யார்? என்பது குறித்து தெரிவிக்கவில்லை.இக்கொலைவழக்கில் நம்பத்தகுந்த தகவலை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசுத்தொகையை சி.பி.ஐ அறிவித்திருந்தது.