வியாழன், நவம்பர் 10, 2011

குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை

0 comments
sardarbura accused
அஹ்மதாபாத்:குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் கொலை, கொலை முயற்சி, கலவரம் நடத்துதல், தீவைப்பு, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய குற்றங்களுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.சி.ஸ்ரீவஸ்தவா தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகள் மீதான இதர சில வழக்குகளில் மூன்று முதல் 10 வருடம் வரையிலான சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம். மேலும் ஒவ்வொருவரும் ரூ.20 ஆயிரம் வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.
துவக்கத்தில் உள்ளூர் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, உச்சநீதிமன்றம் நியமித்த ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம்(எஸ்.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டது. குஜராத் இனப்படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த 9 வழக்குகளில் முதல் வழக்கில் தீர்ப்பு ஸர்தார்புரா வழக்கில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வழக்கில் 76 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற 73 பேர் மீதான வழக்கு 2009 ஜூலை முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு முஸ்லிம்கள்தாம் காரணம் என பொய் பிரச்சாரம் சங்க்பரிவார பயங்கரவாதிகளால் வேகமாக பரப்பப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலை குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் அரங்கேறியது.
இந்த இனப் படுகொலையின் போது நடந்ததுதான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை. ஸர்தார்புராவில் உள்ள வீடுகளை சங்க்பரிவார பாசிச பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தி எரித்து சாம்பலாக்கினர். சொத்துக்களை கொள்ளையடித்தனர். அருகிலிலுள்ள ஊரிலிருந்து கலவரத்திற்கு பயந்து ஸர்தார்புராவில் வீடுகளில் அபயம் தேடிய அப்பாவி முஸ்லிம்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் கதறலையும் பொருட்படுத்தாமல் வெறித்தனமாக வீட்டிற்கு தீவைத்து எரித்துக் கொலைச் செய்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கூட்டுப் படுகொலைக்காக விநியோகித்த ஆயுதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், கொந்தளித்த மக்கள் கூட்டம்தான் கூட்டுப் படுகொலையை நிகழ்த்தியது என விளக்கமளித்த நீதிபதி, தண்டனையை கொலைக் குற்றத்திற்கான மிகவும் குறைந்தபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் எட்டுபேர் மட்டுமே தற்பொழுது சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஜாமீன் கோரி வெளியே உள்ளனர். கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த பெரும் புள்ளிகள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய விசாரணையில் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட 40 பேர் உள்பட 112 சாட்சிகள் விசாரணைச் செய்யப்பட்டனர்.

புனித ஹஜ் பயணிகளுக்கு சேவை புரிந்த விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம்

0 comments
womens fraternity
மினா:சவூதி அரேபியாவில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் புனித பயணிகளுக்கு சவூதி வாழ் இந்தியர்களுக்காக சேவையாற்றி வரும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பைச் சார்ந்த சேவைத் தொண்டர்கள் சிறப்பானதொரு சேவையை கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர். இவர்களது சேவை ஹஜ்ஜிற்கும் செல்வோரின் சிரமங்களை குறைப்பதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இவ்வமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரமும் ஹாஜிகளுக்கு தங்களால் இயன்ற
சேவையை இவ்வாண்டு ஆற்றியுள்ளனர்.
அரஃபாவிலும், ஷைத்தானுக்கு கல்லெறியும் ஜம்ராக்களிலும், முஸ்தலிஃபாவிலும் சென்றுவிட்டு சோர்ந்து வரும் பெண்களுக்கு ஓரளவாவது ஆறுதலை தரும் சேவைகளை புரிய முடிந்ததாக விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரத்தின் துணைச் செயலாளர் ஷாஹினா
கஃபூர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேலும் அதிகமான சேவைத் தொண்டர்கள் பெண் ஹாஜிகளுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
ஸுகுல் அரபு சாலை, அல் ஜவ்ஹரா சாலை ஆகியவற்றில் கிங் அப்துல்லாஹ் பாலத்திலிருந்து ஜம்ராவுக்கு அருகிலுள்ள இந்திய ஹஜ் மிஷனின் கண்காணிப்பில் கூடாரங்களிலும், தனியார் ஹஜ் குரூப்புகளின் கூடாரங்களிலும் விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரத்தை சார்ந்த பெண் சேவைத் தொண்டர்கள் சென்று பெண் ஹாஜிகளை சந்தித்தனர்.
இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் சார்பாக 1000 சேவைத் தொண்டர்கள் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றியுள்ளனர்.

மலேகான்:புரோகித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 comments
M_Id_247326_Lt_Col_Purohit
மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. அதேவேளையில், மற்றொரு குற்றவாளியான அஜய் ரவிர்கருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக சதித்திட்டம் தீட்டியது, குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.டி.எக்ஸை கொண்டுவந்தது ஆகியவற்றில் புரோகித்திற்கு பங்கிருப்பதாக நீதிபதி ஆர்.பி.சவான் தெரிவித்தார். மாதத்தில் ஒரு நாள் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜராக ஜாமீன் வழங்கப்பட்ட ரவிகருகு நீதிபதி உத்தரவிட்டார்.

ராணுவம் இல்லாத பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தேவையா? – உமர் அப்துல்லாஹ் கேள்வி

0 comments
AFSPA_Kashmir
ஜம்மு:பலவருடங்களாக ராணுவம் நிறுத்தப்படாத பிரதேசங்களில் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் தேவை எதற்கு என கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை குறித்து தீர்மானிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என அவர் கூறினார். ராணுவம் பணியாற்றாத பிரதேசங்களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதே தங்களின் நோக்கம் என அவர் கூறினார்.
பாராமுல்லா, ஸோப்பார், குப்வாரா ஆகிய பிரதேசங்களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற கூறவில்லை என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார். இச்சட்டத்தை வாபஸ் பெறுவதுக் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ராணுவம் பணியாற்றாத பிரதேசங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெறுவதில் என்ன பிரச்சனை உள்ளது?பணி முடிந்துவிட்டது எனக்கூறி ராணுவம் ஸ்ரீநகரிலும், புத்காமிலும் செயல்பட்டது. ஜம்முகஷ்மீரில் ஊடுருவலை தடுப்பதற்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்பது ராணுவத்தின் கோரிக்கையாகும். ராணுவம் செயல்படாத பகுதிகளில் சட்டப் பாதுகாப்பிற்கு என்ன தேவை? என்பது நேரடியான கேள்வியாகும். இதற்கான பதிலை ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
கடைசி துப்பாக்கிச் சத்தத்தையும் நிறுத்தும் வரை காத்திருக்க வேண்டுமானால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற ஒருபோதும் இயலாது. அரசுக்கு தைரியம் உள்ளது. துவக்கத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவது சிரமத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இறுதி பலன் நன்றாக இருக்கும். இவ்வாறு உமர் அப்துல்லாஹ் கூறினார்.

ஷஹ்லா மஸூத் கொலை: சி.பி.ஐ கண்காணிப்பில் இரண்டு பா.ஜ.க தலைவர்கள்

0 comments
masood
புதுடெல்லி:மத்தியபிரதேச மாநிலம் போபாலில் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பா.ஜ.க தலைவர்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. விசாரணைக்காக சி.பி.ஐயின் குழு ஒன்று போபாலில் தங்கியுள்ளது.
போபாலைச் சார்ந்த சி.பி.ஐ குழுவால் வழக்கில் போதிய முன்னேற்றத்தை அடைய முடியாததன் காரணமாக புதிய குழுவிடம் விசாரணை பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டுவரும் இரண்டு பா.ஜ.க தலைவர்களில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். ஷஹ்லா மஸூத் வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு தொடர்பிருப்பதாக கூறவது தவறு எனவும், இதற்கான ஆதாரம் இல்லை எனவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்னால் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் துப்பு துலங்காததால் குற்றவாளியை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ அறிவித்தது.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மஸூத் பட்டப் பகலில் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் எவரும் தகவல் அளிக்க தயங்குவதன் பின்னணியில் ஏதோ மர்மமான காரணங்கள் இருக்கலாம் என சி.பி.ஐ கூறுகிறது. மாநில போலீஸாரின் விசாரணை தோல்வியை தழுவியதையடுத்து மாநில அரசின் கோரிக்கைக்கு இணங்க சி.பி.ஐ இவ்வழக்கின் விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

புதன், நவம்பர் 09, 2011

அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை-ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத்...

0 comments
WO-AH711_USIRAN_G_20111108182253
டெஹ்ரான்:அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பின் அருகில் உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் நஜாத் கூறியிருப்பதாவது:இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை கொள்ளையடித்து அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க இயலாது.
சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தலைவர் யூகியோ அமானோ அமெரிக்காவின் கைப்பாவையாவார். மேற்கத்திய சக்திகளின் அணு ஆயுதங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யாத சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அமெரிக்கா வசம் 5 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது.இவ்வாறு நஜாத் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயார் செய்துள்ள அறிக்கை பொய்யான காரணங்களின் பின்னணியில் உள்ளதாகும்.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளிடன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வம் அல்லாத அறிக்கையின் வாதத்தில் உறுதியாக இருந்தால் அதனை விரைவாக வெளியிட வேண்டும் என ஸலாஹி கூறியுள்ளார்.

சிமி தொடர்பு:பொய் வழக்கில் கைதுச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை...

0 comments
Karnataka-map3
பெங்களூர்:இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன்(சிமி) தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கர்நாடகா மாநிலம் பெல்காமில் பதிவுச்செய்யப்பட்ட 2 வழக்குகளில் 11 முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலைச்செய்துள்ளது. 2008-ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்ட இவ்வழக்கில் பெல்காம் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் முஸ்லிம் இளைஞர்களை
விடுதலைச்செய்வதாக அறிவித்தார்.
இஜாஸ், நபீல் காஸிம், நாஸர் வெங்கிடேஷ், தன்வீர் முல்லா, லியாக்கத் அலி, நதீம் ஸய்யித், நாஸர் பட்டேல், டாக்டர் மும்கோஜ், டாக்டர் ஆஸிஃப், ஜக்கால்ஃபி, இம்தியாஸ் ஆகியோரை நீதிமன்றம் நிரபராதிகள் என தீர்ப்பளித்து விடுதலைச்செய்துள்ளது.நாசவேலைகளுக்காக சதித்திட்டம் தீட்டியதாகவும், பாலத்திற்கு அருகே குண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியும் இவ்வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டன.
இவ்வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.இதில் ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஹாஃபிஸ் ஹுஸைன், அபூ பஷீர் ஆகியோர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு இவ்வழக்குகளில் விசாரணை நடைபெற்றது.
2008-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் சிமி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி 13 பேரை போலீஸார் கைதுச்செய்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டன.பெல்காம் வழக்கில் குற்றவாளியாக ஜோடிக்கப்பட்ட டாக்டர் ஆஸிஃப், டாக்டர் மும்கோஜ் ஆகியோர் ஹூப்ளி வழக்கிலும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நதீம் ஸய்யித், நாஸர் பட்டேல் ஆகியோர் அஹ்மதாபாத் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெல்காம் வழக்கில் குற்றவாளிகளாக ஜோடிக்கப்பட்ட மீதமுள்ள 7 பேர் நேற்று இரவு விடுதலையானார்கள்.ஹூப்ளி வழக்கில் இதுவரை 150 சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்துள்ளது.இனியும் இருநூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளின் விசாரணை நடைபெறவேண்டியுள்ளது.அடுத்த விசாரணை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள அஹ்மதாபாத் வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்தியாவில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படாத வழக்குகள் 72 லட்சம்...

0 comments
criminal
புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுவரை 72 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் தேங்கியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கலவரம், பாலியல் வன்புணர்வு ஆகிய வழக்குகள்தாம் தீர்ப்பளிக்கப்படாத வழக்குகளில் பெரும்பகுதியாகும்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் இதில் முன்னணி வகிக்கிறது.ஏழு யூனியன் பிரதேசங்களிலும், 28 மாநிலங்களிலும் 72,58, 502 வழக்குகள் 2010 ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்டுள்ளன

சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம்...

0 comments
sanjiv-bhatt_new
அஹ்மதாபாத்:மோடி அரசு சஸ்பெண்ட் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.நேற்று நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.பி.எஸ் அதிகாரிகளான அதுல் கர்வால், வி.எம்.பர்கி ஆகியோர் அடங்கிய 3 நபர்கள் குழு வீட்டிற்கு வந்து தீர்மானம் நிறைவேற்றிய தகவலை தெரிவித்ததாக சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா தெரிவித்துள்ளார். சத்தியத்திற்கான சஞ்சீவ் பட்டின் போராட்டத்திற்கு அசோசியேசன் பூரண ஆதரவை வாக்குறுதியளித்ததாக அவர் கூறினார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக குற்றம் சாட்டி போலீஸ்காரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சஞ்சீவ் பட் கைதுச்செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பாதுகாப்பை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும்-சஞ்சீவ் பட் கோரிக்கை...

0 comments
Centre_Asks_Mod11196
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பித்த குஜராத் மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தனது பாதுகாப்பு பொறுப்பை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை ஆர்வலர் நதீம் ஸய்யித் கொல்லப்பட்ட சூழலில் சஞ்சீவ் பட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் குறைகள் இல்லாத பாதுகாப்பை ஏற்பாடு செய்யவேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் பட் கடிதம் எழுதியுள்ளார்.
தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என 2011 மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை என பட் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்

கூடங்குளம்:பாதுகாப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்ப்பாளர்கள் கோரிக்கை...

0 comments
09k.jpg.crop_display
திருநெல்வேலி:தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அணுமின்நிலையத்தின் நிலையை குறித்த அறிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை நிபுணர் குழுவிடம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள் வைத்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு செவ்வாய்க்கிழமை காலை திருநெல்வேலி வந்தது.
சர்வதேச கடல்சார் ஆணைய துணைத் தலைவரும், சுற்றுச்சூழல், இயந்திரவியல் துறை நிபுணருமான ஏ.இ.முத்துநாயகம் தலைமையிலான அக்குழுவினர், மாநில அரசுக் குழுவினருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
திருநெல்வேலி ஆட்சியர் இரா. செல்வராஜ் தலைமையிலான மாநிலக் குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், அணுஉலைக்கு எதிரான மற்றொரு குழுவைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய 5 பேர் கலந்துகொண்டனர். இக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆயர் இவோன் அம்புரோஸ் பங்கேற்கவில்லை.
காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி, அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் 11.30 மணிக்கு மாநிலக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் மத்திய மாநில நிபுணர் குழுவினர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.அப்பொழுது அவர்கள் பேச்சு வார்த்தை திருப்தி அளிப்பதாக தெரிவித்தனர்.
மத்தியக் குழுவின் தலைவர் முத்துநாயகம் கூறியதாவது:
மத்திய அரசு அமைத்துள்ள குழு சுதந்திரமான குழு. அணு உலை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டு, மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நலன், நாட்டின் நலன் இரண்டுமே எங்களுக்கு முக்கியம்.முதல் கட்டப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. மாநில அரசுக் குழுவின் பிரதிநிதிகள் பல்வேறு விளக்கங்களைக் கேட்டுள்ளனர். அதுபற்றிய தகவல் எங்களிடம் இப்போது இல்லை. கூடங்குளம் அணு உலையைப் பார்வையிடுவோம். போராட்டக் குழு பிரதிநிதிகள் கேட்ட விளக்கங்களுக்கான பதிலை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம்.
அதுபோல் அணுஉலைப் பாதுகாப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவரம் கேட்போம். அதைத் தொடர்ந்து மீண்டும் மாநிலக் குழு பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவோம். அடுத்த 10 நாள்களுக்குள் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
அணு உலைப் பிரச்னை தொடர்பாக யார் வந்து சந்தித்தாலும் அவர்களுடன் பேசத் தயாராக உள்ளோம். எல்லோருடனும் சேர்ந்து இந்தப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட முழு அளவில் முயல்வோம். அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்குத் தெரிந்தவரை கூடங்குளத்தில் பணிகள் நடைபெறவில்லை. ஆனால், பராமரிப்புப் பணி நடைபெறலாம். அது தவிர்க்க முடியாதது என்றார்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் கூறுகையில், முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. இது எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது.
போராட்டம் நடத்திவரும் மக்களின் அச்சத்தையும், கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்பதே மக்களின் ஒரே நோக்கம் என்பதையும் மத்திய நிபுணர் குழுவிடம் தெரிவித்தோம் என்றார்.
அணுமின் நிலையத்தை நிறுவ கூடங்குளத்தை தேர்வுச்செய்தது குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை குறித்தும் உள்பட ஏராளமான ஆவணங்களை அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் கேட்டுள்ளனர். இதுத்தொடர்பாக 50 கேள்விகள் அடங்கிய மனுவை நிபுணர் குழுவினருக்கு அளித்துள்ளதாக அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் புஷ்பராயன் மற்றும் யேசுராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.ஆவணங்கள் கிடைக்காமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும், தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் தொடர்புடைய ஆவணங்களையும்
அளிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் சூழலில் அதனைக்குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னர் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின்நிலையம் சென்று உள்ளூர் வாசிகளின் அச்சத்தை போக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இப்பகுதியின் வளர்ச்சிக்கு 200 கோடி ரூபாய் திட்டத்தையும் அப்துல் கலாம் பரிந்துரைத்திருந்தார்.

வியாழன், நவம்பர் 03, 2011

இறைத்தூதரை அவமதிக்க முயன்ற பிரஞ்சு பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

0 comments
web-france-hebd_1337305cl-8
பாரிஸ்:முஹம்மது நபி (ஸல்) அவர்களை இந்த வார விருந்தினராக அழைத்து செய்தி வெளியிட்ட சாடிறிக் பிரெஞ்சு பத்திரிக்கை தலைமை அலுவலகத்தில் தீ பிடித்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்தீவிபத்து குறித்து பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளதாவது கடந்த செவ்வாய்யன்று இரவு சார்லி ஹெப்டோவில் அமைந்துள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை தீவிபத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை யாரேனும் இத்தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று தெரியவில்லை.
மேலும் இத்தீவிபத்து குறித்து சாடிறிக் பிரெஞ்சு பத்திரிக்கையின் தலைவர் சார்ப் கூறியதாவது இத்தீவிபத்தால் தங்களுக்கு பெரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் கணினியில் இருந்த பல தகவல்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பத்திரிக்கையில் வேலை செய்துவருபவர்கள் கூறியதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி தவறான கருத்துக்களை தங்களது பத்திரிக்கையில் வெளியிட்டப்பின் ஷரியா ஹெப்டோ என்னும் பெயரில் தங்களுக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
சாடிறிக் என்ற பிரெஞ்சு வாரப் பத்திரிக்கையின் சமீபத்திய பிரதியில் இஸ்லாமிய புரட்சிகளை கேலிசெய்தும் முன் அட்டையில் “சிரிப்பு மிகுதியால் நீங்கள் இறக்கவில்லை என்றால் 100 கசையடி” என்றும் செய்தி வெளியிட்டது.மேலும் “இஸ்லாம் கேலிக்குரிய மார்க்கம்” என்னும் வார்த்தைகளுடன் முஹம்மது (ஸல்) அவர்களை சிகப்பு மூக்கு வைத்த நபர் போன்று கேளிசித்திரமும் வரைந்து செய்தி வெளியிட்டது.
மேலும் இப்பத்திரிகை தனது சிறப்பு வெளியீட்டில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹலால் குடிப்புகள் பற்றியும் இலகுவான ஷரியத் பற்றியும் மேலும் பெண்கள் ஷரியத் சட்டங்கள் பற்றியும் தனது தலையங்கத்தில் கேலி செய்து செய்தி வெளியிட்டது.
அஹ்மத் தபி என்னும் பிரெஞ்சு முஸ்லிம் சமூக ஆர்வலர் இது பற்றி கூறியதாவது இந்த பத்திரிக்கையானது முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் படியும் அவர்களின் சந்தோசத்தை கெடுக்கும் வகையிலும் செய்தி வெளியிட்டு வருவதாக கூறினார்.
மேலும் பத்திரிக்கைகளில் வரும் இது போன்ற செய்திகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப் பட்டு வரும் மார்க்கத்தைப் பற்றி தவறான பார்வைக்கு வழிவகுக்கும் என்று கூறினார். இது போன்ற செய்தியை கிறிஸ்துவர்களுக்கு எதிராக வெளியிட்டால் அவர்கள் புகார் அளிக்காமல் இருப்பார்களா? என்றும் வினவினார்.
இந்த பத்திரிக்கை வெளியிட்ட அட்டைப்படம் தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தடங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்- SDPI தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத்

0 comments
Sayed
கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்தான் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் கிராமவாசிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் கிராமமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார் எ.ஸயீத். அப்பொழுது அவர் கூறியதாவது:’கூடங்குளம் தமிழகத்திற்கு மட்டும் பிரச்சனை அல்ல.மாறாக, கேரளா, கர்நாடகா உள்பட அனைவரின் பிரச்சனையாகும். ஆசையூட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் முன்னால் அடிபணிந்துவிடாதீர்கள். இயற்கையையும், மனிதர்களையும் அழித்துவிட்டு வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கக்கூடாது.’ என அவர் கூறினார்.
எஸ்.டி.பி.ஐயின் இன்னொரு தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.ஆவாத் ஷெரீஃப் உரையாற்றுகையில், அணுசக்தி நிலையங்கள் மனித குலம் மற்றும் ஜீவராசிகளின் வம்ச நாசத்திற்கு காரணமாக மாறும் ஆபத்தான நிலையங்களாகும் என குறிப்பிட்டார்.
கேரளாவில் இதேபோன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக போராட்டத்தை வலுப்படுத்துவோம் என கேரள மாநில எஸ்.டி.பி.ஐயின் தலைவர் நாஸருத்தீன் எழமரம் தெரிவித்தார்.
இதன் ஒருபகுதியாக மனித உரிமை தினமான டிசம்பர்-10-ஆம் தேதி கேரளா-தமிழ்நாடு எல்லையில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிகழ்ச்சி நடைபெறும். ஆட்சியாளர்கள், எதிர்கட்சியினர், சட்டசபை உறுப்பினர்கள்,மனித உரிமை மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் ஆகியோருக்கு இவ்விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என நாஸருத்தீன் உறுதியளித்தார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் காதைப்பொத்திக்கொள்ளும் மத்திய அரசு கூடங்குளம் போராட்டத்தை புறக்கணிப்பது ஆபத்தை வரவழைக்கும் என தமிழக எஸ்.டி.பி.ஐயின் தலைவர் ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி கூறினார்.

ஷஹ்லா மஸூத் கொலை:அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு-சி.பி.ஐ

0 comments
shehla_cbi0509
புதுடெல்லி/போபால்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலையில் டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக சி.பி.ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. சி.பி.ஐயின் லக்னோ பிரிவு நடத்திய விசாரணையில் இதுக்குறித்த தெளிவான தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி தகவல் அறியும் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்பு வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததன் காரணமாக வழக்கில் போதிய முன்னேற்றம் ஏற்படாமலிருந்தது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.
டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு ஷஹ்லாவின் கொலையில் பங்கிருப்பதாக சி.பி.ஐ கூறினாலும் அவர்கள் யார்? என்பது குறித்து தெரிவிக்கவில்லை.இக்கொலைவழக்கில் நம்பத்தகுந்த தகவலை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசுத்தொகையை சி.பி.ஐ அறிவித்திருந்தது.

ஃபலஸ்தீனில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவு

0 comments
SlowMoGenocide
டெல்அவீவ்:ஐ.நாவின் விஞ்ஞான, கலாச்சார, கல்வி அமைப்பான யுனெஸ்கோ ஃபலஸ்தீனுக்கு முழுமையான உறுப்பினர் பதவி அளித்ததைத்தொடர்ந்து கிழக்கு ஜெருசலத்திலும், மேற்கு கரையிலும் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2000 சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு சொந்தமான பிரதேசங்கள் என உரிமை கோருவதற்கு கிழக்கு ஜெருசலத்திலும், மேற்கு கரையிலும் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்ட ஃபலஸ்தீன் நாடு என்பது அந்நாட்டு மக்களின் விருப்பமாகும்.
இப்பிரதேசத்தில்தான் இஸ்ரேல் முக்கியமாக சட்டவிரோத குடியிருப்புகளை கட்டிவருகிறது. குடியிருப்புகளை கட்டுவதுடன் ஃபலஸ்தீனுக்கு சொந்தமான வரி வருமானத்தை முடக்கவும் இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலின் இந்நடவடிக்கை யுனெஸ்கோவில் ஃபலஸ்தீனுக்கு கிடைத்த உறுப்பினர் பதவிக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகும் என அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்துவதற்கான இஸ்ரேலின் உத்தரவு சமாதான முயற்சிகளுக்கு கேடு விளைவிப்பதாகும் என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித்தொடர்பாளர் நபீல் அபு ருதைனா தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீன் மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைதான் இஸ்ரேல் முடக்கி வைத்துள்ளது என அவர் கூறினார். இவ்வாண்டு இரண்டாவது தடவையாக ஃபலஸ்தீன் ஆணையத்தின் பெயரால் வசூலிக்கும் பணத்தை இஸ்ரேல் முடக்கி வைத்துள்ளது.
இஸ்ரேலின் உத்தரவிற்கு சில ஐரோப்பியநாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலின் தீர்மானம் அமைதிக்கான முயற்சிகளை தகர்ப்பதாகும் என கருத்து தெரிவித்துள்ளன.உத்தரவை வாபஸ் பெற ஐரோப்பிய யூனியனின் கொள்கை உருவாக்க தலைவர் காதரின் அஷ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்புத்துறை பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. ஆனால், எவ்வகையான ஏவுகணையை சோதனை நடத்தியது என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. மேற்காசியாவில் ஒரே அணு ஆயுத நாடான இஸ்ரேல் கடந்த 2008-ஆம் ஆண்டு அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் ஜெரிகோ ஏவுகணையை சோதனை நடத்தியிருந்தது

வியாழன், அக்டோபர் 27, 2011

தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்

0 comments
bg
திருச்சூர்:’தேசத்துரோகியான மகளின் தாயாரான உங்களுக்கு குழந்தைகளுக்கு விஷத்தைக்கொடுத்துவிட்டு தற்கொலைச்செய்யக்கூடாதா?’ என ஒரு ஐ.பி அதிகாரி தன்னை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஷைனாவின் தாயார் நஃபீஸா கூறுகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீசாரின் அட்டூழியத்தால் அனுபவித்துவரும் உள்ளத்தை கலங்கச்செய்யும் துயரங்களை தேஜஸ் நிருபருடன் பகிர்ந்துக்கொண்டார் நஃபீஸா.
யார் இந்த ஷைனா?-சட்டத்தில் பட்டம் பெற்றவர்தாம் ஷைனா. பெரிங்கோட்டுக்கரா என்ற இடத்தைச்சார்ந்தவரும், தொழிலாளர் யூனியன் உறுப்பினருமான ருபேஷை ஷைனா திருமணம் செய்ததைத்தொடர்ந்து அவரது வாழ்வில் அமைதி காணாமல் போனது.
ருபேஷிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும், இதில் ஷைனாவுக்கும் பங்குண்டு என குற்றம்சாட்டி இவர்களை போலீஸ் வேட்டையாடி வருகிறது.இவர்கள் இருவரும் தற்பொழுது தலைமறைவாக உள்ளனர். 2007 ஆம் ஆண்டு நந்திக்கிராமில் வாழ்ந்த மக்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக வெளியேற்றிய நடவடிக்கைக்கு எதிராக பிரச்சாரம் நடத்திய குழுவினருக்கு உதவினார் என குற்றம் சாட்டி நள்ளிரவில் ஒரு மணிக்கு வீடு புகுந்து ஷைனாவும் அவரது குழந்தைகளும் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீப்பிள் மார்ச் பத்திரிகையின் எடிட்டர் கோவிந்தன் குட்டியை சந்திக்க சென்ற குழுவினருடன் சென்றபோதும் கைதுச்செய்வதாக மிரட்டப்பட்டார் ஷைனா. நிலம்பூரில் ரெயில் கவிழ்ப்பு சம்பவத்தின் பெயரிலும் ருபேஷிற்கு கைது மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஷைனாவின் வீட்டில் போலீஸார் கதவை உடைத்துவிட்டு அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா, சி.டிக்கள் ஆகியவற்றை எடுத்துவிட்டு வீட்டை புதிய பூட்டைப்போட்டு பூட்டிவிட்டுச்சென்றுள்ளனர். பின்னர் ஷைனாவின் தாயார் நஃபீஸா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வீட்டு சாவியை மீட்டுள்ளார்.
பின்னர் கடைசியாக கடந்த மே மாதம் 31-ஆம் தேதி வீட்டிலிருந்து வாங்கிச்சென்ற குடையை திருப்பி அளிக்க வந்த இளைஞருடன் வந்த போலீஸ் வீட்டின் வாசலை உடைத்து பரிசோதனை நடத்தி பல பொருட்களையும் எடுத்துச்சென்றுள்ளனர்.இப்பகுதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரனும், போலீஸ்காரர் அபிலாஷும் ஷைனாவின் மகளிடம் மோசமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். ஷைனாவின் புகாரில் உண்மை நிலவரத்தை கண்டறிய வந்த க்ரோ வாசு என்ற மனித உரிமை ஆர்வலரின் தலைமையில் வந்த குழுவினரை போலீஸ் முதலில் தடுத்துள்ளது.
மேலும் போலீஸ் அட்டூழியத்தை குறித்து விபரம் அறிய வந்த ஃபேஸ்புக் குழுவினரையும் போலீஸ் கைதுச்செய்துள்ளது. அரச பயங்கரவாதம் வெளியே தெரியாமலிருக்க போலீஸ் அஞ்சுகிறது என்பதன் நிதர்சனம்தான் இச்சம்பவங்கள்.
வலப்பாடு ஷைனா மன்சில் என்ற வீட்டில் தனது பேத்திகளுடன் நஃபீஸா வசிக்கும் வீட்டில் வாரத்திற்கு மூன்றுதடவை போலீஸ் விசாரிக்க வருகிறது. எந்த நிமிடமும் போலீஸ் வரலாம் என்ற அச்சத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறார் ஹெல்த் சூப்பர்வைசராக பதவி வகித்து ஓய்வு பெற்ற நஃபீஸா.

ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்

0 comments
TH14_MORADABAD__753669f
முராதாபாத்:கடந்த ஜூலை மாதம் உ.பி மாநிலம் முராதாபாத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து போலீஸாரால் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம் சிறுவர்கள் நீதி கிடைக்காமல் 4 மாதங்களாக சிறையில் வாடுகின்றனர்.
செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இச்சிறுவர்களுக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை. கலவரத்தை நடத்துதல், கொலை முயற்சி ஆகிய குற்றங்கள் இந்த அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் சுமத்தியுள்ளது.
அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள் மீது கடுமையான குற்றங்களை சுமத்தியதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நான்கு மாதங்களாக பள்ளிக்கூட மாணவர்களான முஸ்லிம் சிறுவர்களை சிறையில் அடைத்ததற்கு காரணம் தெரிவிக்க கோரி தேசிய மனித உரிமை கமிஷன் முராதாபாத் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறுவர்கள் குற்ற வழக்குகளில் கைதுச்செய்யப்பட்டால் ஜுவைனல்(சிறுவர்கள் சீர்திருத்த) நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படவேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் முஸ்லிம் சிறுவர்களை பொய் குற்றம் சாட்டி போலீஸ் சிறையில் அடைத்துள்ளது.
முராதாபாத்தில் அஸாலத்பாகில் ரெய்டு நடத்தும் வேளையில் புனித திருக்குர்ஆனை அவமதித்த போலீஸை எதிர்த்து வீதிகளில் இறங்கிய போராட்டம் நடத்திய முஸ்லிம்களுக்கும் போலீசுக்கும் இடையே ஜூலை மாதம் 3-ஆம் தேதி நடந்த மோதலில் சிறுவர்களை கைதுச்செய்தது போலீஸ்.இதர 35 நபர்களும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் என கைதுச்செய்யப்பட்டவர்கள் மீது கலவர குற்றம் சாட்டி நான்கு தடவை போலீஸ் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சிறுவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச்செய்யக்கூடாது என்ற சட்டத்தையும் போலீஸ் கடைப்பிடிக்கவில்லை.
சம்பவம் நிகழ்ந்த அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய வேளையில் மோதல் நடந்ததால் அவர்கள் வீட்டிற்கு செல்லமுடியாத சூழலில் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கலவரத்தை தூண்ட முயன்றார்கள் என குற்றம் சாட்டிய போலீஸ் இந்த அப்பாவி முஸ்லிம் சிறுவர்களை கைதுச்செய்து சிறையில் தள்ளியுள்ளது. இவர்கள் சிறுவர்கள் அல்லர் வயதில் மூத்தவர்கள் என்பது போலீசாரின் வாதமாகும்.
ஆனால் பள்ளிக்கூட பதிவேடுகளில் இரு முஸ்லிம் சிறுவர்களுக்கு 14 வயதும், மற்ற இரு முஸ்லிம் சிறுவர்களின் வயது 15 ஆகும்.இது போலீசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக வீடியோ காட்சி பதிவுச்செய்துள்ளதாக கூறும் போலீஸ் அதனை இதுவரை வெளியிடவில்லை.
பாலியல் வன்புணர்வு, கொலை ஆகிய குற்றங்களை செய்யாத சிறுவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச்செய்யக்கூடாது என்பது சட்டமாகும். சிறுவர்களின் வயதை மதிப்பிட பள்ளிக்கூட சான்றிதழை அளவுகோலாக கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் போலீஸாருக்கு எதிராக அமையும். சிறுவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும் கூட அவர்களை சிறைகளில் அடைக்கக்கூடாது எனவும் போலீஸ் ஸ்டேசன்களில் சிறுவர் நல அதிகாரிகளை நியமிக்கவேண்டும் எனவும் அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

செவ்வாய், அக்டோபர் 11, 2011

சமூக நீதி மாநாடு ஒரு மைல்கல்லாக மாறும்: இ.எம்.அப்துற்றஹ்மான்

0 comments

புதுடெல்லி:அடுத்த மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூகநீதி மாநாடு சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக மாறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.
சிட்டி ப்ளாஸாவில் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார் அவர். முஸ்லிம் முத்தஹிதா மாஸ் சேர்மன் மெளலானா நவாபுத்தீன் நக்‌ஷபந்தி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநாட்டின் அறிக்கையை சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டார்.
தென்னிந்தியாவிற்கு வெளியே பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் மிகப்பெரிய மாநாடாக சமூக நீதி மாநாடு அமையும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார். ஏதேனும் ஒரு பிரிவினர் தங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக முயன்றால் அவர்களை தேச விரோதிகளாகவும், வளர்ச்சியின் எதிரிகளாகவும் முத்திரை குத்தி எதிர்க்கின்றனர்.
இந்தியாவில் நடந்த மேலும் 12 குண்டுவெடிப்புகளிலும் சங்க்பரிவாரத்தின் பங்கிருப்பதாக இப்பொழுது ஒப்புக்கொள்கின்றனர். 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளை குறித்தும் அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இ.அபூபக்கர், அம்பேத்கர் சமாஜ் கட்சி தலைவர் பாய் தேஜ்சிங், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் துணைத்தலைவர் மெளலானா சுல்ஃபிக்கர் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஃபோபியா

0 comments


   இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும்நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும்

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை

0 comments
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின்

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

அன்னா ஹசாரேவும் அரசியல் நாடகங்களும் .....

0 comments
ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது வடக்கில் ... ஊழல் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக அணிதிரள்வார்கள் , இது இன்றையமோசமான நிலையில் நம் நாட்டுக்கு கண்டிப்பாக தேவையான
ஒன்றுதான், ஆனால் அந்த புள்ளி கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாதல்லவா? அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் பற்றி எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் என்னை அவரை முழுமையாக ஆதரிக்கவிடாமல் தடுக்கின்றன....

சனி, ஆகஸ்ட் 13, 2011

சுதந்திர தின அணிவகுப்பு தடை எதிரொலி: நீதிமன்றம் சென்றது கேரள பாப்புலர் ஃப்ரண்ட்

0 comments
freedom parade2
மழையாளத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
கொச்சி: கேரள பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 4 இடங்களில் நடக்கவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள காவல்துறையினர் தடை விதித்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மனு ஒன்றை அளித்துள்ளது. இதன் விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சமச்சீர் கல்வியை போராடி பெற்ற மாணவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள்

0 comments
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழ் நாடு அரசு இன்னும் 10 தினங்களுக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை விநியோகித்து முடிக்க வேண்டும் என்றும், உடனே சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்விக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது

0 comments

மும்பை:2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

மல்லிப்பட்டினம் ஏஸ்டிபிஐ-கிளை சார்பாக கட்சி விளக்கபொதுக்கூட்டம்

0 comments

        03:08:2011-அன்று மாலை 7:00PM மனியளவில் மல்லிப்பட்டினம் ஏஸ்டிபிஐ-கிளை சார்பாக கட்சி விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் ரியாஸ் அகமது வரவேற்புரையாற்றினார் அடுத்ததகா இந்த கூட்ட்த்திற்கு D.முகமது ஜிலானி-கிளைத் தலைவர் தலைமையுரையாற்றினார் பிறகு கட்சியின்  கொள்கைகளை விரிவாகா ஏஸ்டிபிஐ-யின் தஞ்சை மாவட்டத்தலைவர் அ.முகமது பாருக் அவர்கள் விளக்கி சிரப்புரையாற்றினார் இந்த கூட்டதிற்க்கு முகமது ராபிக்- நகர தலைவர்,நூருல் அமின் -கிளை பொருளாளர்,லுக்மான் -கிளை துனைதலைவர், மாலிக்-கிளை செயளாளர் அகியோர் முன்னிலைல் நடைபெற்றது கடைசியாக ரசின் அகமது அவர்கள் நன்றியுரை அற்றி கூட்த்தை முடிதுவைததார்

சனி, ஜூலை 30, 2011

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!

0 comments



JULY 29, பெங்களூரு: பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார்.  டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார்.

அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது. நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார்.

தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைய அரும்பாடுபட்ட எடியூரப்பா, கர்நாடகாவின் முதல் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். ஒவ்வொரு முறையும், மேலிட தலைவர்களின் ஆதரவுடன் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார். லோக் ஆயுக்தா அறிக்கை வெளியானவுடன், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பா.ஜ., மேலிட தலைவர்கள் முடிவு செய்து, எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி கட்டளையிட்டனர்.

எடியூரப்பா, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே என்ற கிராமத்தில், 1943, பிப்., 27ம் தேதி பிறந்தார்.  1970: சிக்கரிபுர் என்ற பகுதியின் ஆர்.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செயலராக நியமிக்கப்பட்டார். 1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார். 1975: சிக்கரிபுர் நகராட்சி தலைவராக தேர்வானார்.  2010 நவ., : அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை 28: சட்ட விரோதமாக கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக இவர் மீது, "லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம் சாட்டியது. இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி உத்தரவிட்டது. குற்றச்சாட்டு: சுரங்க ஊழல் தொடர்பாக, கர்நாடக மாநில அரசிடம் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, "சுரங்க நிறுவனங்களிடம் இருந்து எடியூரப்பா குடும்பத்தினர், 30 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளனர்' என, தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குத் தொடரவும் பரிந்துரை செய்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல்

0 comments




ஜோஹன்ஸ்பெர்க்
 : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
 இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

sdpi

0 comments

வெள்ளி, ஜூலை 29, 2011

29 ஜூலை, 2011 சென்னையில் பாப்புலர் ஃப்ர்ண்ட் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

0 comments

சென்னை: கோவையில் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தி அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்திரித்த அன்றைய உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியை பதிவி நீக்கம் செய்யக்கோரி சென்னை மெமோரியல் ஹால் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று மாலை சரியாக 3:30 மணி அளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

கடந்த 2006 ஆம் ஆண்டு "கோவையை தகர்க்க சதி" என்ற பெயரில் சில வயர்களையும், 4 பேட்டரிகளையும், சில புத்தகங்களையும் வைத்துக்கொண்டு சில இளைஞர்களை தீவிரவாதிகளாக்கி அன்று தமிழகத்தில் சமூக இயக்கமாக செயல்பட்டுகொண்டிருந்த மனித நீதிப் பாசறை (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) வை எப்படியாயினும் ஒழித்துவிட வேண்டும் என்ற துவேஷ எண்ணத்தில் செயல்பட்டார் அன்றைய கோவை மாவட்ட உளவுத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ரத்தின சபாபதி.

இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து இது ஜோடிக்கப்பட்டு வழக்கு என்று கூறினர். ஆனால் இன்று வரை இவ்வாறு பொய் வழக்கு போட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதியை தண்டிப்பதை விட்டு விட்டு மேலும் மேலும் பதவி உயர்வைக்கொடுத்து அழகு பார்த்தது அன்றைய தமிழக அரசு.

தற்போது தேர்வாணையக்குழுவின் உறுப்பினராக மேலும் பதவி உயர்வு பெற்று "தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது" என்ற மமதையில் செயல்பட்டு வருகிறார் ரத்தின சபாபதி. சென்றைய ஆட்சிக்காலத்தில் அநியாயம் நிகழ்த்தப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் வகையில் தமிழக அரசு இன்று பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதே போல் இந்த காவல் துறையில் உள்ள கருப்பு ஆடான "ரத்தின சபாபதி" செய்த கயமத்தனத்தை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷேக் அன்ஸாரி அவர்கள தலமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும் விடியல் வெள்ளி பத்திரிக்கையின் ஆசிரியருமான சகோதரர் இஸ்மாயில் மற்றும் எஸ்.டி.பி.ஐ-ன் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்க்ளும் சிறப்புரை ஆற்றினர். இதில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும் அதனால் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம் என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

ரத்தின சபாபதியை டிஸ்மிஸ் செய்வதோடு மட்டுமல்லாமல் அவரை யார் இவ்வாறு செய்யத்தூண்டியது என்பதனையும் விசாரிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐன் மாநிலத் தலைவர் கேட்டுக்கொண்டார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர் போராட்டமாகவோ, அல்லது மறியலாகவோ மாறுவது தமிழக அரசின் கையில் தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்தின சபாபதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இறுதியாக சென்னை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்டின் செயலாளர் சகோதரர் முஹம்மது ஷாஹித் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – பதிலடி கொடுக்குமா இந்தியா

0 comments


qck_20110728_151828
நாட்டிங்காம்:இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
சொந்த மண்ணில் போட்டி நடப்பது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பீட்டர்சன், டிராட், பெல், பிரையர், பிராடு ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் டிரெம்லெட்டுக்கு பதிலாக பிரெஸ்னன் களமிறங்க வாய்ப்புள்ளது. அவருடன் ஆண்டர்சன், ஸ்டூவர் பிராடு வேகக் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. இந்திய அணி பேட்டிங்கில் முகுந்த், டிராவிட், லஷ்மண், ரெய்னா கணிசமாக ரன் குவித்தாலும் மற்ற வீரர்கள் தடுமாற்றத்துடனேயே விளையாடினர்.
தொடக்க வீரர் கம்பீர் காயம் அடைந்துள்ளதால் அவர் களமிறங்குவதும் கேள்விக் குறியாகவே உள்ளது. அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், முகுந்த் & டிராவிட் ஜோடி இன்னிங்சை தொடங்கும். கம்பீருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அணியில் இடம் பெறலாம். ஜாகீருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் அல்லது முனாப்புக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகம். லார்ட்ஸ் டெஸ்டில் ஹர்பஜன் சுழல் எடுபடாததால் அவருக்கு பதிலாக அமித் மிஷ்ராவை சேர்ப்பது பற்றியும் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக யோசித்து வருகிறது. களமிறங்கும் 11 வீரர்கள் பற்றி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் முடிவு செய்யப்படும் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தொடர்களில் இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்றாலும், பின்னர் சுதாரித்து விளையாடி தொடரை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது போலவே இங்கிலாந்து தொடரிலும் இந்தியா சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனுபவ வீரர்கள் சச்சின், டிராவிட், லஷ்மண் கை கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். நம்பர் 1 அந்தஸ்து பறிபோகும் அபாயம் உள்ளதால், இந்திய வீரர்கள் முனைப்புடன் விளையாடி பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளனர். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பாஜக மேலிட உத்தரவு பதவி விலகுகிறார் எடியூரப்பா

0 comments


yediurappa 1
பெங்களூர்:பல ஆயிரம் கோடி சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார். அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது.
நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார். அவருடன், அமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட சிலர் மட்டுமே வந்தனர்.
பெங்களூரில் தன் இல்லத்தில், பா.ஜ., தலைவர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். எடியூரப்பா வீட்டில் நடந்த கூட்டத்தில், 30 தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில், ஏழு அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏ.,க்களும் அடங்குவர். எடியூரப்பா நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அமைச்சர்கள்  ஷாபா, ரேணுகாச்சார்யா, உதாசி, உமேஷ் கட்டி, பசவராஜ் பொம்மை மற்றும் ஜீவராஜ், கட்டா சுப்பிரமணிய நாயுடு, யோகேஷ் பட், சந்திரகாந்த் பெல்லட், வால்மீகி நாயக், ஆயனூர் மஞ்சுநாத் ஆகியோர் முக்கியமானவர்கள்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, “முதல்வர் வீடு மற்றும் கூட்டத்தை விட்டு அனைவரும் வெளியேறுங்கள்” என்று, டில்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.
முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்யச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டதையடுத்து, எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த பலரும், அவரை கைகழுவியதாக தெரிகிறது. இதுவரை எடியூரப்பாவை எதிர்த்து வந்த ரெட்டி சகோதரர்களும், பெல்லாரி எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.
எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்டம் காட்ட முயற்சித்தார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால் அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் பாஜக தலைவர் கட்காரிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் அவர் பதவி விலகவுள்ளதாக பின்னர் தெரிய வந்தது. இதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
அதாவது, தனக்குப் பின்னர் சதானந்த கெளடா எம்.பியை முதல்வராக்க வேண்டும், தான் சொல்லும் நபர்களையே அமைச்சர்களாக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு நிபந்தனை போட்டுள்ளாராம் எடியூரப்பா. இவை நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்த்த பின்னர் பதவியிலிருந்து விலகுவது என்ற முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று புதிய சட்டமன்ற பாஜக தலைவரை பாஜக தேர்வு செய்கிறது. இதற்காக மேலிடத் தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் பெங்களூர் வருகின்றனர். அவர்கள் பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்து புதிய முதல்வர் குறித்து ஆலோசித்து தேர்வு செய்வர்.
தற்போதைய நிலவரப்படி உடுப்பி எம்.பி. சதானந்த கெளடா, அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், சுரேஷ் குமார் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

முன்னால் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரிடம் விசாரணை நடத்தப்படும் - என்.ஐ.ஏ

0 comments


இந்திரேஷ் குமார்
பாரளுமன்றத்தில் பருவ மழைக்கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பாக மீண்டும் ஒரு அரசியல் புயல் வீச தயாராக உள்ளது. மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரான இந்திரேஷ் குமாரிடம் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பற்றி தீவிர விசாரணை செய்வதற்கு  முடிவெடுத்துள்ளது. இந்திரேஷ் குமாரைப்போன்று இன்னும் எத்துனை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இது போன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற உண்மை வெளிவர இருக்கிறது.

இதற்கு முன்பு கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது 14 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விசாரணையை சி.பி.ஐ போலீசார் ஆர்.எஸ்.எஸ்ன் மூத்த தலைவராக இருக்கும் இந்திரேஷ் குமாரிடம் விசாரணை நடத்தினர். தேசிய புலனாய்வுக்குழு இந்த வழக்கை தீர விசாரிக்க முடிவு செய்துள்ளது.


ஆறு தீவிரவாத தாக்குதல்கள் சம்பந்தமாகவும், மூத்த ஆர்.எஸ்.எஸ்ன் பிரச்சாரகன் சுனில் ஜோஷி கொல்லப்பட்ட விவகாரம் சம்பந்தமாகவும் தேசிய புலனாய்வுக்குழு இந்திரேஷ் குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. சுனில் ஜோஷிதான் பல தீவிரவாத தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்டதாகவும், அந்த உண்மைகளை மறைப்பதற்காக சூழ்ச்சி செய்து அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது.


சுனில் ஜோஷி
இந்திரேஷ் குமார் எந்நேரத்திலும் விசாரணை செய்யப்படலாம். பல வருடங்களுக்கு முன்னால் இந்திரேஷ் குமார் ஜம்மு காஷ்மீரி ஆர்.எஸ்.எஸ்-ன் ஊழியனாக செயல்பட்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளனர். சுனில் ஜோஷி இரண்டு நபர்களை கடந்த 2006 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு அழைத்துச்சென்று தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக பயிற்சி கொடுத்துள்ளான்.

மேலும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-ன் தலமையகத்தில் வைத்து இந்திரேஷ் குமாரை சந்தித்துள்ளான். அப்போது இந்திரேஷ் குமார் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு பணம் கொடுத்துள்ளான். இதன் பின்னர் சுனில் ஜோஷியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து இந்திரேஷ் குமார் வெளியேற்றப்பட்டான். சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பிலும், சுவாமி அசிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியோடு இந்திரேஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசிமானந்தாவும் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக சுனில் ஜோஷிக்கு பணம் கொடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுனில் ஜோஷி தன்னைப்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்ததற்காகத்தான் இந்திரேஷ் குமார் சுனில் ஜோஷியை திட்டமிட்டு 2007ஆம் ஆண்டு கொன்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவைகளை பற்றிய விசாரணையை தீவிர படுத்த தற்போது என்.ஐ.ஏ இந்திரேஷ் குமாரை விசாரிக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாட்டில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளின் விசாரணைகள் முடிவடைந்த போது அவ்வனைத்திலும் இந்துத்துவ தீவிரவாதிகளின் கைவரிசையே உள்ளது. நிரூபிக்கப்படாத பல குண்டு வெடிப்புகளில் இல்லாத அமைப்புகளை தொடர்புபடுத்தி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை நிறுத்தி விட்டு சங்கப்பரிவார ஃபாஸிஸ்டுகளை விசார்த்தாலே போதும் இன்னும் பல விதாமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற தீவிரவாத தாக்குதல்களிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும்.

அதை விட்டு விட்டு குண்டு வைத்தவனை சுதந்திரமாக உலாவவிட்டுவிட்டு அப்பாவி மக்களை கைது செய்தால், இது போன்ற குண்டுவெடிப்புகள் தொடரத்தான் செய்யும். எத்துனை அரசாங்கங்கள் மாறினாலும் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

- முத்து

இந்தியா அரசாங்கமே தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் - ஐ உடனே தடை செய்

0 comments

Quantcast
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும்  அதற்க்கு காரணம் இந்தியன் முஜாகிதீன் என்றும் .பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் ,ஆந்திர  முஜாகிதீன்கள் என்றும் ,புதிய புதிய முஜாகிதீன்களை உருவாக்கும் இந்தியாவின் முட்டாள் உளவு துறைக்கும் இந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள்
இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத இயக்கமான R.S.S  தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை  திட்டவட்டமாக கூற  முடியும் அதில் முக்கியமானதாகவும்  ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக  குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம்  அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித்  இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால் இந்த இந்தியாவில் பல வன்முறைகள் கையாளப்பட்டுள்ளன .
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணியில் நின்றது R.S.S தான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்  மாவீரன் கர்கறேயின் மரணம் .ஆக இதை போன்று இப்போது மும்பையில்  நடை பெற்ற  குண்டு வெடிப்புக்கு காரணம் R.S.S தான் என்று  திட்டவட்டமாக கூற முடியும்
இந்தியா அரசாங்கத்தால்  இரண்டுமுறை தடை செய்யப்பட்ட இந்த  R.S.S தீவிரவாத இயக்கம் மீண்டும் நிரந்தரமாக  தடை செய்ய பட வேண்டும்

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்

0 comments
          
புதுடெல்லி:ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ வாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.
சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு(பா.ஜ.க) தலையிடுகிறது. இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார்.
தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும் எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி​யின் கொள்கை பிரகடனம் – அ​ம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம் 27 Jul 2011 8ef29476d6711aa5db7f247fb0f8eea3_full

0 comments
புதுடெல்லி:நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில்(manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.
இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான்.
நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080:ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்களை துரத்துவதற்கான உள்நாட்டு போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவரீதியிலான ஆதரவை பிரகடனப்படுத்தியுள்ளான்.
1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ப்ரெவிக் ஒதுக்கியுள்ளான்.
’இந்திய நாடு/ஹிந்து எதிர்ப்பு போராட்டம்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றவேண்டும் என்ற லட்சியத்துடன் வலதுசாரி ஹிந்து தேசீயவாதத்தின் அதாவது ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அரசியல் கொள்கைகளை காவிமயமாக்கல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு இத்தகையதொரு நாட்டை உருவாக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இத்தகையதொரு லட்சியத்திற்காக பாடுபடும் அமைப்புகள்தாம் சனாதன இயக்கங்கள் அதாவது ஹிந்து தேசீயவாதிகள்.
ஐரோப்பாவை போல முஸ்லிம்களிடமிருந்தும், கலாச்சார மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் அச்சுறுத்தலை தடுத்துநிறுத்த இவ்வமைப்புகள் ஐரோப்பாவின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவேண்டும்.
இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான். இந்தியாவுக்கு வெளியே வாழக்கூடிய ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களிடமிருந்தும் மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து புரிகிறது என்றாலும் இந்தியாவில் வசிப்பவர்கள் அதைக்குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என ப்ரெவிக் ஆதங்கப்படுகிறான்.
ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் வலதுசாரி இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய தேசவிரோத சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.
லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்கள் இந்தியாவில் கோயில்களை கொள்ளையடித்ததாகவும், ஹிந்துக்களை கொலைச் செய்ததாகவும் சில ஹிந்துத்துவ வரலாற்றாசிரியர்களை மேற்கோள்காட்டி ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் குற்றம் சாட்டுகிறான்.
முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்க் சாலக்(தலைவர்) எம்.எஸ்.கோல்வால்கரின்  ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது.
ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன்வைக்கிறார்.
இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

வியாழன், ஜூலை 28, 2011

அஸ்சலாமுஅலைக்கும் மல்லிப்பட்டினதில எஸ்டிபிஐ சார்பகா மரக்கன்ரு நடும் விழா

0 comments
  எஸ்டிபிஐ- சார்பக  தமிழ்நாடு முலுவதும் மரக்கன்ரு நடும் விழா சிரப்பானாமுரையில் நடைப்பெருகின்ரது அதில் ஒரு அங்கமகா  மல்லிப்பட்டினதில் எஸ்டிபிஐ சார்பக மரக்கன்ரு நடும் விழாவிர்கனா  கூன்டுகல் தயார்னிலையில் உல்லனா.மரக்கன்ரு நடும் விழாவிர்கன வேலைகல் மும்முரமாகா நடைப்பெற்றூக்கொன்டிருக்கின்ட்ரது.               



  உரிமை:முகம்மது பைசல்









சுதந்திரம் என்பது நமது உரிமை சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் - பாப்புலர் ஃப்ரண்ட்

0 comments
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 15  சுதந்திர அணிவகுப்பு நடத்த இருக்கிறது. இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யபட்டது .சந்திப்பின் போது மாநில தலைவர் A.S இஸ்மாயில் அவர்கள் கூறியதாவது 



65 வது சுதந்திர தினத்தை கொண்டாடு வதற்கு நாமெல்லாம் தயாராகி வருகின்றோம் .கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் பொது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகின்றது இந்த வருடமும் ஆகஸ்ட் 15  நெல்லை மாவட்டத்தில் சுதந்திர அணிவகுப்பு நடத்த தீர்மானித்துள்ளோம் .



சுதந்திர போரில் ஆணிவேராக இருந்தவர்களையும் , போராட்ட களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூற வேண்டியது , ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை ஆகும் .உடல் வழிகளையும் , உயிர் அர்பணிப்பு களையும் பொருட்படுத்தாது போராடி பெற்ற சுதந்திரத்தை ஆகஸ்ட் 15 ல் மிகுந்த மகிழ்ச்சியோடு உற்சாகதோடும் தேச வளர்ச்சியின் உண்மையான அக்கறை கொண்ட உள்ளதுடன் கொண்டாட வேண்டும் .

இவற்றை வெளிபடுத்தும் நோக்கத்தோடு சுதந்திர முழக்கமிட்டு , வீர நடை போட்டு   பாப்புலர் ஃப்ரண்ட் சீருடை அணிந்து சுதந்திர அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது .இந்த வருடமும் கொண்டாட இருக்கின்றோம் 

மேலும் இந்திய வளங்கள் நவீன பெயர்களில் அந்நியர்களுக்கு தாரை வார்க்க படுவதும் தேச குடிமக்கள் வேலையின்றி அடிமை குடிமக்களாக மாற்ற படும் அவல நிலைகளும் மாற்றியமைக்க பட வேண்டும் .ஊழல் களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை களும் , கடுமையான தண்டனைகளும் அமலாக்க பட வேண்டும் என்று தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறினார்  அப்பொழுது அருகில் மாநில செயலாளர் பைசல் ,மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன்,மாவட்ட செயலாளர் ஹைதர் அலி , பாளை நகர தலைவர் ஷேக்   முகைதீன் ,மேலபாளையம் நகர தலைவர் மூஸல் காலிம் கலந்து கொண்டனர் .

நன்றி: நெல்லை பாப்புலர் ஃப்ரண்ட்