வியாழன், நவம்பர் 03, 2011

இறைத்தூதரை அவமதிக்க முயன்ற பிரஞ்சு பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

0 comments
web-france-hebd_1337305cl-8
பாரிஸ்:முஹம்மது நபி (ஸல்) அவர்களை இந்த வார விருந்தினராக அழைத்து செய்தி வெளியிட்ட சாடிறிக் பிரெஞ்சு பத்திரிக்கை தலைமை அலுவலகத்தில் தீ பிடித்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்தீவிபத்து குறித்து பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளதாவது கடந்த செவ்வாய்யன்று இரவு சார்லி ஹெப்டோவில் அமைந்துள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை தீவிபத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை யாரேனும் இத்தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று தெரியவில்லை.
மேலும் இத்தீவிபத்து குறித்து சாடிறிக் பிரெஞ்சு பத்திரிக்கையின் தலைவர் சார்ப் கூறியதாவது இத்தீவிபத்தால் தங்களுக்கு பெரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் கணினியில் இருந்த பல தகவல்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பத்திரிக்கையில் வேலை செய்துவருபவர்கள் கூறியதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி தவறான கருத்துக்களை தங்களது பத்திரிக்கையில் வெளியிட்டப்பின் ஷரியா ஹெப்டோ என்னும் பெயரில் தங்களுக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.
சாடிறிக் என்ற பிரெஞ்சு வாரப் பத்திரிக்கையின் சமீபத்திய பிரதியில் இஸ்லாமிய புரட்சிகளை கேலிசெய்தும் முன் அட்டையில் “சிரிப்பு மிகுதியால் நீங்கள் இறக்கவில்லை என்றால் 100 கசையடி” என்றும் செய்தி வெளியிட்டது.மேலும் “இஸ்லாம் கேலிக்குரிய மார்க்கம்” என்னும் வார்த்தைகளுடன் முஹம்மது (ஸல்) அவர்களை சிகப்பு மூக்கு வைத்த நபர் போன்று கேளிசித்திரமும் வரைந்து செய்தி வெளியிட்டது.
மேலும் இப்பத்திரிகை தனது சிறப்பு வெளியீட்டில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹலால் குடிப்புகள் பற்றியும் இலகுவான ஷரியத் பற்றியும் மேலும் பெண்கள் ஷரியத் சட்டங்கள் பற்றியும் தனது தலையங்கத்தில் கேலி செய்து செய்தி வெளியிட்டது.
அஹ்மத் தபி என்னும் பிரெஞ்சு முஸ்லிம் சமூக ஆர்வலர் இது பற்றி கூறியதாவது இந்த பத்திரிக்கையானது முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் படியும் அவர்களின் சந்தோசத்தை கெடுக்கும் வகையிலும் செய்தி வெளியிட்டு வருவதாக கூறினார்.
மேலும் பத்திரிக்கைகளில் வரும் இது போன்ற செய்திகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப் பட்டு வரும் மார்க்கத்தைப் பற்றி தவறான பார்வைக்கு வழிவகுக்கும் என்று கூறினார். இது போன்ற செய்தியை கிறிஸ்துவர்களுக்கு எதிராக வெளியிட்டால் அவர்கள் புகார் அளிக்காமல் இருப்பார்களா? என்றும் வினவினார்.
இந்த பத்திரிக்கை வெளியிட்ட அட்டைப்படம் தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தடங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்- SDPI தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத்

0 comments
Sayed
கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்தான் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் கிராமவாசிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் கிராமமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார் எ.ஸயீத். அப்பொழுது அவர் கூறியதாவது:’கூடங்குளம் தமிழகத்திற்கு மட்டும் பிரச்சனை அல்ல.மாறாக, கேரளா, கர்நாடகா உள்பட அனைவரின் பிரச்சனையாகும். ஆசையூட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் முன்னால் அடிபணிந்துவிடாதீர்கள். இயற்கையையும், மனிதர்களையும் அழித்துவிட்டு வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கக்கூடாது.’ என அவர் கூறினார்.
எஸ்.டி.பி.ஐயின் இன்னொரு தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.ஆவாத் ஷெரீஃப் உரையாற்றுகையில், அணுசக்தி நிலையங்கள் மனித குலம் மற்றும் ஜீவராசிகளின் வம்ச நாசத்திற்கு காரணமாக மாறும் ஆபத்தான நிலையங்களாகும் என குறிப்பிட்டார்.
கேரளாவில் இதேபோன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக போராட்டத்தை வலுப்படுத்துவோம் என கேரள மாநில எஸ்.டி.பி.ஐயின் தலைவர் நாஸருத்தீன் எழமரம் தெரிவித்தார்.
இதன் ஒருபகுதியாக மனித உரிமை தினமான டிசம்பர்-10-ஆம் தேதி கேரளா-தமிழ்நாடு எல்லையில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிகழ்ச்சி நடைபெறும். ஆட்சியாளர்கள், எதிர்கட்சியினர், சட்டசபை உறுப்பினர்கள்,மனித உரிமை மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் ஆகியோருக்கு இவ்விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என நாஸருத்தீன் உறுதியளித்தார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் காதைப்பொத்திக்கொள்ளும் மத்திய அரசு கூடங்குளம் போராட்டத்தை புறக்கணிப்பது ஆபத்தை வரவழைக்கும் என தமிழக எஸ்.டி.பி.ஐயின் தலைவர் ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி கூறினார்.

ஷஹ்லா மஸூத் கொலை:அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு-சி.பி.ஐ

0 comments
shehla_cbi0509
புதுடெல்லி/போபால்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலையில் டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக சி.பி.ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. சி.பி.ஐயின் லக்னோ பிரிவு நடத்திய விசாரணையில் இதுக்குறித்த தெளிவான தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி தகவல் அறியும் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்பு வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததன் காரணமாக வழக்கில் போதிய முன்னேற்றம் ஏற்படாமலிருந்தது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.
டெல்லியில் சில அரசியல் தலைவர்களுக்கு ஷஹ்லாவின் கொலையில் பங்கிருப்பதாக சி.பி.ஐ கூறினாலும் அவர்கள் யார்? என்பது குறித்து தெரிவிக்கவில்லை.இக்கொலைவழக்கில் நம்பத்தகுந்த தகவலை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசுத்தொகையை சி.பி.ஐ அறிவித்திருந்தது.

ஃபலஸ்தீனில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவு

0 comments
SlowMoGenocide
டெல்அவீவ்:ஐ.நாவின் விஞ்ஞான, கலாச்சார, கல்வி அமைப்பான யுனெஸ்கோ ஃபலஸ்தீனுக்கு முழுமையான உறுப்பினர் பதவி அளித்ததைத்தொடர்ந்து கிழக்கு ஜெருசலத்திலும், மேற்கு கரையிலும் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2000 சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு சொந்தமான பிரதேசங்கள் என உரிமை கோருவதற்கு கிழக்கு ஜெருசலத்திலும், மேற்கு கரையிலும் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்ட ஃபலஸ்தீன் நாடு என்பது அந்நாட்டு மக்களின் விருப்பமாகும்.
இப்பிரதேசத்தில்தான் இஸ்ரேல் முக்கியமாக சட்டவிரோத குடியிருப்புகளை கட்டிவருகிறது. குடியிருப்புகளை கட்டுவதுடன் ஃபலஸ்தீனுக்கு சொந்தமான வரி வருமானத்தை முடக்கவும் இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலின் இந்நடவடிக்கை யுனெஸ்கோவில் ஃபலஸ்தீனுக்கு கிடைத்த உறுப்பினர் பதவிக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகும் என அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்துவதற்கான இஸ்ரேலின் உத்தரவு சமாதான முயற்சிகளுக்கு கேடு விளைவிப்பதாகும் என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித்தொடர்பாளர் நபீல் அபு ருதைனா தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீன் மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைதான் இஸ்ரேல் முடக்கி வைத்துள்ளது என அவர் கூறினார். இவ்வாண்டு இரண்டாவது தடவையாக ஃபலஸ்தீன் ஆணையத்தின் பெயரால் வசூலிக்கும் பணத்தை இஸ்ரேல் முடக்கி வைத்துள்ளது.
இஸ்ரேலின் உத்தரவிற்கு சில ஐரோப்பியநாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலின் தீர்மானம் அமைதிக்கான முயற்சிகளை தகர்ப்பதாகும் என கருத்து தெரிவித்துள்ளன.உத்தரவை வாபஸ் பெற ஐரோப்பிய யூனியனின் கொள்கை உருவாக்க தலைவர் காதரின் அஷ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்புத்துறை பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. ஆனால், எவ்வகையான ஏவுகணையை சோதனை நடத்தியது என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. மேற்காசியாவில் ஒரே அணு ஆயுத நாடான இஸ்ரேல் கடந்த 2008-ஆம் ஆண்டு அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் ஜெரிகோ ஏவுகணையை சோதனை நடத்தியிருந்தது